கஸல் பதிப்பகம்

இலங்கைச் சூழலில் நல்ல படைப்புக்களை வெளிக்கொணர்வதும் வாசகர்களுக்கு நியாயமான விலையில் புத்தகங்களைக் கையளிக்கவும் புத்தகங்கள் தொடர்பான உரையாடல்களை மேற்கொள்ளவும் கஸல் பதிப்பகம் அர்ப்பணிப்புச் செய்யும்.

புத்தகங்களுக்கு

எங்களுடைய பதிப்புகள்

வெள்ளாவி

வாசித்து முடித்த பிறகு இந்நாவலை மார்போடு அணைத்து ஒரு முத்தத்தையும் கொடுத்துவிட வைக்கிறார். வாழ்வியலைச் சொல்லி விடுவதுடன் அதற்குள் வாழவைத்துவிடுவது எல்லாக் கதைசொல்லிகளுக்கும் வாய்த்துவிடுவதில்லை. ஆனால் விமல் எங்களை வாழ்ந்து காட்டவும் செய்கிறார். விமல் எப்போதும் விமலாக இருப்பதுதான் பெருமகிழ்ச்சி. தீவுக்காலையில் இருந்து மீள்வதொன்றும் அவ்வளவு இலகுவானதல்ல.

-சப்றி

இலங்கையில் Commonfolks பாரதி புத்தகாலயம்
රු600.00
View Book

வக்காத்துக் குளம்

ஏழு வயதில் விளையாட்டாய் சந்தமாமா பாடிக்காட்டிய சிறுவர் பாடலொன்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை எழுபதுகளின் முழுமையாய் புரிய வைக்கிறார். இதனூடாக இந்நாவலின் கதைப்பின்னல் (Plot) தத்துவச்சார்பு கொண்டதாகவே நம்மால் உணரமுடிகிறது.

இந்நாவல் தரும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடு மிகத் துல்லியமானது. விசாலமானது.

இனி எஞ்சிய காலமெல்லாம் வக்காத்துக்குளமும் அதன் நித்திய ஹீரோ சாந்தமாமாவும் நம் நினைவுகளுடன் கூடவே பயணப்படப் போவதைத் தவிர்த்திட முடியாது போலும்.

எஸ். பாயிஸா அலி
கிண்ணியா

FathimaBooks.com CommonFolks
රු200.00
View Book

புத்தரின் நிழல்

பதினேழு புதிய சிறுகதைகளைக் கொண்ட புத்தரின் நிழல் என்ற இத்தொகுதி அறபாத்தின் இலக்கிய முதிர்ச்சியைக் காட்டும் பல கதைகளைக் கொண்டுள்ளது. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பல்வேறு வாழ்க்கைக் கோலங்களை, யுத்தத்தின் வடுக்களைப் பதிவுசெய்துள்ள கதைகள் இவை. சலிப்பில்லாமல் கதைசொல்லும் திறன் அறபாத்துக்குக் கைவந்துள்ளது. வெவ்வேறு கதைசொல்லும் பாணிகளைக் கையாண்டுள்ளார். பின்நவீனச் “சோதனை”யிலும் அக்கறைகாட்டியுள்ளார். இலக்கியச் செழுமையும் செய்நேர்த்தியும் மிக்க இக்கதைகள் தேர்ந்த வாசகருக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எம். ஏ. நுஃமான்

 

இலங்கையில் விரைவில்

பாரதி புத்தகாலயம் Commonfolks

රු430.00
View Book

ரூமியின் வைரங்கள்

13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக மகாகவியும் சூஃபி ஞானியும் ஆன மௌலானா ரூமி அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் இந்நூல் உங்களிடம் கொண்டு வருகிறது.

FathimaBooks.com
රු400.00
View Book

ஆயிஷா

கற்பித்தலில் ஆசிரியர்களின் அசிரத்தையும் சின்னச் சின்ன கவனயீனமும் பாரபட்சமும் நாம் நினைக்காத தாக்கத்தை செலுத்திவிடுகிறது. ஆயிஷா கதையை வாசித்த பல ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தலின் போக்கையும் மாணவர்கள் மீதான கரிசன நிலைப்பாட்டிலிருந்தும் மேம்பட்டுள்ளனர். சிரியர் தொழிலின் மேன்மையை பலர் உணரத் தொடங்கியதும் இக்கதையின் பின்னர் என்பதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆயிஷா என்றென்றும் மனதைவிட்டு அகலாதவளாக மாறிவிடுகிறாள்.

View Book
வக்காத்துக் குளம்
தீரன். ஆர்.எம். நௌஸாத்

இம்மாதத்தின் சிறப்பு புத்தகம்

//ghazal.lk/wp-content/uploads/2021/09/Sabnem.jpg

முழுக் கதையையும் வட்டாரமொழிச் சொல்லில் எழுதி முடிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அந்தப் புதினத்தையும் நிகழ்திக் காட்டியிருக்கிறார் விமல் குழந்தைவேல் அண்ணா.

ஷப்னம் மஸீம்
வெள்ளாவி மூலம் ஆற்றங்கரையில் தண்ணீரில் வெதுப்பிக்கொண்டு என்னால் தூமைச்சீலைகளை வெளுக்கமுடிந்தது. கூப்பங்கடை அரிசி, பருப்புக்காக விடியக் காலையிலேயே புடி புடி என்று நடந்துபோய் ஒரு வாய் சோறு, தண்ணி இல்லாமல் கிட கிடயாய்க் கிடந்து வெறுங்கையோடு திரும்பிவந்த மாதவி, நாகமணியோடு என்னாலும்கூட வரமுடிந்தது. இப்படி வெள்ளாவியை வாசிக்கும் பொழுது அது தேர்த்தெடுத்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்குள்ளாலும் எம்மால் வாழ்ந்து கொண்டே போகலாம்.
//ghazal.lk/wp-content/uploads/2021/10/Sabne-e1635702824566.png

இம்மாதத்தின் எழுத்தாளர்

தீரன் ஆர். எம். நெளஸாத்

தீரன் ஆர்.எம். நௌஷாத் அறிமுகமே தேவையற்ற அற்புதமான ஓர் கதைசொல்லி. தொழில்முறையில் ஓய்வுநிலைத் தபாலதிபர். நாவல், சிறுகதை, கவிதை, குறும்பா மற்றும் ஆய்வுகள்... என பல்வேறுபட்ட இலக்கியப் படைப்புகளின் சொந்தக்காரர். இவரது முதல் நாவல் நட்டுமை.

பச்சைப் பசேலெனும் வயல்களும், குளிர்ந்த வாய்க்கால்களும் அதையொட்டி வாழ்ந்த நெய்தல் நில மக்களின் மனஅவசங்களுமாய் நீளும் அற்புத நாவலது.

ஒவ்வொரு அத்தியாயமும் தேர்ந்த இயக்குனர் ஒருவர் இயக்கிச் செப்பனிட்ட திரைக்காட்சிகளாகவே எனக்குள் விரிந்த மிக வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தந்த நாவலது.

'நட்டுமை' தவிர்ந்து, 'கொல்வதெழுதுதல் 90' (நூலாக), 'நிற்பதுவே/பறப்பதுவே/நடப்பதுவே', 'வானவில்லே ஒரு கவிதை' (இரண்டும் பத்திரிகையில் தொடராக வெளிவந்தவை) போன்ற நாவல்களும், அத்தோடு 'வல்லமை தாராயோ', 'வெள்ளிவிரல்' என்பன அவரின் சிறுகதைத் தொகுதிகளும் ஆகும்.

'வெள்ளிவிரல்' இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றதோடு கிழக்கு மாகாண சாகித்திய விருதினையும் வென்ற நூலாகும்.

நட்டுமை நாவலும் காலச்சுவடு நடாத்திய சுந்தர ராமசாமி நினைவு போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலாகும்.